
திருநெல்வேலி மாநகராட்சி நெல்லை மண்டலம் 17வது வார்டுக்கு உட்பட்ட பேட்டை பழைய பேட்டை இணைப்பு சாலையில் உள்ள கனரக வாகன முனையகத்தில் மாவட்ட ஆட்சியர் சுகுமார், மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் ஆகியோர் இன்று ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது திருநெல்வேலி மண்டல உதவி ஆணையாளர், செயற்பொறியாளர், உதவி பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.