கண்காணிப்பு கேமரா அமைத்து கொடுத்த மேயர்
திருநெல்வேலி மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன்;

தமிழ்நாடு வ.உ.சி இளைஞர் பேரவை மற்றும் நெல்லை மாவட்ட சைவ வேளாளர் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று நெல்லை மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் பிள்ளை மணிமண்டபத்தை சுற்றி பாதுகாப்பு கண்காணிப்பு கேமரா தனது சொந்த செலவில் அமைத்துள்ளார். இதனை தொடர்ந்து மேயர் ராமகிருஷ்ணனுக்கு தமிழ்நாடு வ.உ.சி இளைஞர் பேரவை சார்பாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் நன்றி தெரிவித்துள்ளனர்.