சிவகங்கையில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கையில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்;

Update: 2025-04-11 06:15 GMT
சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு, டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு டாஸ்மாக் மாற்றுத் திறனாளிகள் பணியாளர் நல சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் சந்திரமோகன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், டாஸ்மாக் பணியாளர்களுக்கு பணி நிரந்தரமாக்கல், காலமுறை ஊதிய வழங்கல், பணி பாதுகாப்பு, மாற்றுத் திறனாளி பணியாளர்களுக்கு பிற துறைகளில் வழங்கப்படும் சலுகைகள் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மேலும், டாஸ்மாக் பணியாளர்களும் அரசு ஊழியர்களுக்கு சமமான ஊதியம் வழங்க வேண்டுமென வலியுறுத்தி கண்டன கோஷங்களையும் எழுப்பினர்

Similar News