உருவாட்டியில் பங்குனி தேரோட்டம்
உருவாட்டியில் பங்குனி தேரோட்டம் நடைபெற்ற நிலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்;

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகேயுள்ளது உருவாட்டி கிராமம். இங்குள்ள பெரியநாயகி அம்மன் கோயில் பிரசித்தி பெற்றது. சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இக்கோவில் மூன்றாம் நூற்றாண்டை சேர்ந்தது. காளையார் கோவில் சுற்றுவட்டார பகுதியில் பிரசித்தி பெற்ற இக்கோவிலில் பங்குனி திருவிழா கடந்த ஏப்., 2 ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அதனை தொடர்ந்து அம்மனுக்கு காப்பு கட்டியதும், பக்தர்கள் விரதத்தை தொடங்குவார்கள். மயில், பறவை காவடிகளும், தீச்சட்டி எடுத்தும், பூக்குழி இறங்கியும் பக்தர்கள் நேர்த்தி கடனை செலுத்தி வந்தனர். பங்குனி திருவிழாவை முன்னிட்டு தினமும் சுவாமி பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வருவார். விழாவின் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் பெரியநாயகி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் அம்மனுக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதில் உருவாட்டி அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் ஏராளமானோர் பங்கேற்று தேர் வடம் பிடித்து இழுக்க, நான்கு ரத வீதிகளில் தேரோட்டம் நடைபெற்றது. தொடர்ந்து தேர் நிலையை அடைந்ததும் பழங்களை சூறையிடப்பட்டனர். இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாட்டை சிவகங்கை தேவஸ்தான அறங்காவலர் ராணி மதுராந்தகி நாச்சியார், மேலாளர் இளங்கோ உள்ளிட்டோர் மற்றும் கிராமத்தினர் விழாவுக்கான ஏற்பாடுகளை செய்தனர்.