காலியாக உள்ள சத்துணவு பணியாளர்களுக்கு விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை மாவட்டத்தில் காலியாக உள்ள சத்துணவு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்;

Update: 2025-04-11 13:07 GMT
காலியாக உள்ள சத்துணவு பணியாளர்களுக்கு விண்ணப்பிக்கலாம்
  • whatsapp icon
சிவகங்கை மாவட்டத்தில் சத்துணவு மையங்களில் காலியாகவுள்ள 427 சமையல் உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் போது, விண்ணப்பதாரர் உரிய விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மட்டும் வருகின்ற 26.04.2025 தேதிக்குள் விண்ணப்பித்திடல் வேண்டும். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்துடன் பள்ளி மாற்றுச்சான்றிதழ், SSLC மதிப்பெண் சான்றிதழ். குடும்ப அட்டை, இருப்பிடச்சான்று, ஆதார் அட்டை, சாதிச்சான்று ஆகியவற்றின் நகல்களை இணைத்திடல் வேண்டும். மேலும், விதவை, கணவரால் கைவிடப்பட்டோர். மாற்றுத்திறனாளிகள் அதற்கான சான்றிதழ்களின் இணைத்திடல் வேண்டும். நேர்முகத் தேர்வின் நகல்களையும் போது, அசல் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளுதல் வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்

Similar News