சிவகங்கையில் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் விழிப்புணர்வு பேரணி

சிவகங்கையில் சமரச தீர்வு நாளை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது;

Update: 2025-04-12 02:18 GMT
சிவகங்கையில் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் விழிப்புணர்வு பேரணி
  • whatsapp icon
சிவகங்கையில் சமரச தீர்வு நாளை முன்னிட்டு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மாநில சமரச தீர்வு மைய வழிகாட்டுதலின்படி, சமரச தீர்வு நாளை முன்னிட்டு சிவகங்கை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற இருசக்கர வாகன பேரணியை முதன்மை மாவட்ட நீதிபதி அறிவொளி கொடியசைத்து தொடக்கி வைத்தார். மேலும், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சமரச தீர்வு மையப் பணிகள் குறித்து விளம்பர வாகனம் மூலம் ஒளிபரப்பப்பட்ட வீடியோ காட்சிகளை நீதிபதிகள், வழக்குரைஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள், வழக்காடிகள் மற்றும் பொதுமக்கள் பார்வையிட்டனர். பின்னர், முதன்மை மாவட்ட நீதிபதி தலைமையில் நீதிபதிகள், வழக்குரைஞர்கள், பணியாளர்கள் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இருந்து நடை பயணமாக காஞ்சிரங்கால் பேருந்து நிலையம் வரை சென்று சமரச தீர்வு நாள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர். பேரணியில், போக்குவரத்து காவல்துறை, வழக்குரைஞர்கள், பணியாளர்கள் தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் சமரச தீர்வு குறித்து வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இருந்து புறப்பட்டு, திருப்பத்துார் சாலை, பழைய நீதிமன்ற சாலை, காந்தி வீதி மற்றும் மரக்கடை வீதி வழியாக பேருந்து நிலையத்தை சென்றடைந்தனர். இந்நிகழ்ச்சியில், குடும்ப நல நீதிபதி ஜி.முத்துக்குமரன், மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி ஆர்.கோகுல்முருகன், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் ஏ.பசும்பொன் சண்முகையா, சார்பு நீதிபதி ஆர்.பாண்டி, ஊழல் தடுப்பு நீதிமன்ற நீதிபதி என்.செந்தில்முரளி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர், சார்பு நீதிபதி வி. ராதிகா, குற்றவியல் (எண்.1) நீதிமன்ற நீதிபதி பி.செல்வம், மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி வி.டி. தீபதர்ஷினி, குற்றவியல் நீதித்துறை நடுவர்( எண்.2) நீதிமன்ற நீதிபதி இ. தங்கமணி மற்றும் வழக்குரைஞர்கள், பணியாளர்கள், வழக்காடிகள் கலந்து கொண்டனர்

Similar News