திருப்பத்தூரில் சாலை விழிப்புணர்வு பேரணி

திருப்பத்தூரில் சாலை விழிப்புணர்வு பேரணியை நடத்திய மாணவிகள்;

Update: 2025-04-12 02:24 GMT
திருப்பத்தூரில் சாலை விழிப்புணர்வு பேரணி
  • whatsapp icon
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் செயல்படும் நேஷனல் அகாடமி சமுதாயக் கல்லூரி சார்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. காவல் ஆய்வாளர்கள் தலைமையில் நகரின் முக்கிய விதிகளான மதுரை ரோடு, பெரிய கடை வீதி, நான்கு ரோடு என அனைத்து வீதிகளின் வழியாக விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு மாணவிகள் சாலை பாதுகாப்பு பேரணி நடத்தினர். அதனைத் தொடர்ந்து நகரின் மையப்பகுதியான அண்ணா சாலை, பழைய பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவிகள் கருப்பு உடை அணிந்து மது அருந்தி வாகனம் ஓட்டுதல், இரு சக்கர வாகனங்களில் விரைவாக செல்லுதல், போக்குவரத்து விதிமுறைமீறல், போன்றவற்றால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்த விழிப்புணர்வு நாடகத்தை நடித்து காட்டினர். இந்நிகழ்ச்சியில் திருப்பத்தூர் நகர் காவல் ஆய்வாளர்கள் போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.

Similar News