தேவகோட்டையில் முருகனுக்கு பால்குடம் எடுத்து வழிபாடு

தேவகோட்டை வெற்றிவேல் முருகன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் - எம்எல்ஏ பங்கேற்பு;

Update: 2025-04-12 02:32 GMT
தேவகோட்டையில் முருகனுக்கு பால்குடம் எடுத்து வழிபாடு
  • whatsapp icon
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பழைய சருகணி ரோடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வெற்றிவேல் முருகன் திருக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு அம்மச்சி ஊரணி சொர்ணவிநாயகர் கோவிலில் இருந்து 50-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோவிலுக்கு சென்று நேத்தி கடன் செலுத்தினர். அதைத்தொடர்ந்து முருகனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு பஞ்சமுக தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து மாலையில் முருகப்பெருமானுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் காரைக்குடி எம்எல்ஏ மாங்குடி கலந்து கொண்டு வழிபட்டார். உடன் கட்சி முக்கிய நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர். அதை தொடர்ந்து 3000-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கும் அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது

Similar News