தேவகோட்டை அருகே அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா

நாடாளம்மன் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது;

Update: 2025-04-12 02:36 GMT
தேவகோட்டை அருகே அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா
  • whatsapp icon
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே மேலசெம்பொன்மாரி கிராமத்தில் நாடாளம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக யாகசாலை வேள்வி நடைபெற்று, அனுக்ஞ் பூஜை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், வாஸ்து சாந்தி, அங்கூரார்பனம் மற்றும் பூர்ணாகுதி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித நீரை சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கடம் புறப்பாடு நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் கும்பக்கலசத்தில் புனித நீரை ஊற்றி அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. பல நூற்றுக்கணக்கான சுற்றுவட்டார கிராம மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்.

Similar News