தேவகோட்டையில் முருகன் கோவிலில் சிறப்பு அபிஷேகம்
தேவகோட்டை முருகன் கோவிலில் பங்குனி உத்திர பெருநாளை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது;
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை தொண்டியார் வீதி தி.ராமசாமி கோவில் என்ற பழனியாண்டவர் கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழா முன்னிட்டு முருக வேலுக்கு பால், தயிர், இளநீர் , பஞ்சாமிர்தம் உள்ளிட்ட நவதிரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம், தீபாரதனையுடன் சிறப்பு வழிபாடு நடை பெற்றது. பின்னர் சிறப்பு தீபாரதனை காண்பிக்கப்பட்டு சுமார் 1000 க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.