ஸ்ரீ பாலமுருகன் கோவிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனை
தேவகோட்டை ஸ்ரீ பாலமுருகன் கோவிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது;
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ராம்நகரில் ஸ்ரீ பாலமுருகன் கோவிலில் பங்குனி உத்திரம் தினத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. முன்னதாக விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். பின்னர் ஸ்ரீ பாலமுருகனுக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர், திருநீர் உள்ளிட்ட 11வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து முருகனுக்கு சிறப்பு அலங்காரம் செய்தனர். பின்னர் பக்தர்கள் சஷ்டி கவசம் பாட, அரோகரா கோஷத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.