
கீரனூர் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ்(45). இவரது 19 வயது மகளுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. திருமணம் நிச்சயிக்கப்பட்டவருடன் பல இடங்களுக்கு அவர் சுற்றித்திரிந்தார். அப்போது நெருக்கமாக இருந்ததில் கர்ப்பமானார். திருமணத்துக்கு முன்பு கர்ப்பமானது வெளியே தெரிந்தால் அவமானம் என்று கருதிய இளம்பெண் கருவை கலைப்பதற்காக அதிக அளவு மாத்திரைகளை உட்கொண்டார். இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பரிசோதனை செய்த டாக்டர்கள் கர்ப்பப்பையை அகற்ற வேண்டும் என்று தெரிவித்தனர். பெற்றோர்கள் சம்மதத்துடன் கர்ப்பப்பை அகற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இளம்பெண் இறந்தார். இதுகுறித்து கீரனுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.