செங்கீரை அருகே சிவபுரத்தில் இருந்து மதுரை செல்லும் சாலையில் ஏராளமான மரங்கள் வளர்ந்துள்ளதால் மற்ற ஊர்களுக்கு செல்லும் வழிகாட்டு போர்டை மறைப்பதால் வெளியூரில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் தடுமாறி செல்கின்றனர். ஆகவே போர்டுகளை மறைக்கும் மரங்களை அகற்றி நெடுஞ்சாலைத்துறையின் போர்டுகள் முழுமையாக தெரிய வேண்டும் என வாகன ஓட்டிகளும் அப்பகுதியில் சமூக அலுவலரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
