திருப்பத்தூரில் கலைஞர் கனவு இல்லம் திட்டம் நேரடியாக பயணிகளை சென்றடைய வேண்டும் ஏவ வேலு பேட்சி

கலைஞர் கனவு இல்லம் திட்டம் நேரடியாக பயணிகளை சென்றடைய வேண்டும் ஏவ வேலு பேட்சி;

Update: 2025-04-18 09:20 GMT
திருப்பத்தூர் மாவட்டம் கலைஞர் கனவு இல்லம் திட்டம் நேரடியாக பயணிகளை சென்றடைய வேண்டும் யாராவது இதில் கையூட்டு பெற்றால் மாவட்ட நிர்வாகம் சார்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் அதிகாரிகளுக்கும் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும் பொதுப்பணித்துறை அமைச்சர் எவ. வேலு எச்சரிக்கை. கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் 868 பயனாளிகளுக்கு ரூபாய் 30 கோடியே 30 லட்சம் மதிப்பிலான பணி ஆணைகளை அமைச்சர் எவ.வேலு வழங்கினார் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை தொகுதியில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு பணி ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஏவா வேலு கலந்துகொண்டு 868 பயனாளிகளுக்கு கலைஞர் கனவு இல்லம் வீடுகள் கட்டிக் கொள்ள ரூபாய் 30 கோடியே 30 லட்சம் மதிப்பிலான பணி ஆணைகளை வழங்கினார். பின்னர் பேசிய அமைச்சர் எ.வ. வேலு எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கமும் அந்த காட்சி கொடுப்பவர்களாக மக்களுக்கு உழைத்துக் கொண்டிருக்கிறார். அவர் எப்போது தூங்குகிறார் இப்போது எடுத்துக் கொள்கிறார் என்று யாருக்கும் தெரியாது. 2030 ஆம் ஆண்டிற்குள் குடிசை இல்லாத மாநிலமாக உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் ஜோலார்பேட்டை தொகுதியில் 2025-2026 ஆண்டில் கலைஞ்சர் கனவு இல்லம் திட்டத்தில் 955 வீடுகளை வழங்க ரூ.30 கோடியே 10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து வழங்கப்பட்டுள்ளது.என்று பேசிய அவர் இந்த திட்டம் நேரடியாக பயனாளிகளுக்கு சென்று சேர வேண்டும்,இதில் யாரும் கையூட்டு பெற கூடாது.அப்படி பெற்றால் மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்கும் என்றும் அரசு அதிகாரிகளுக்கு உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும் எச்சரிக்கை விடுத்தார். பின்னர் பேசிய அவர் ஏழைகளின் ஊட்டி என்று சொல்லக்கூடிய ஏலகிரி மலையில் சுற்றுலா தளத்தை விரிவாக்கம் செய்து மேம்படுத்துவதற்காக சுற்றுலாத்துறை சார்பாக ரூ 10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. என்று பேசினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சிவ சௌந்தரவல்லி , திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர்கள் தேவராஜ், வில்வநாதன உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News