தூங்கிக் கொண்டிருந்த மீனவர் வெட்டி படுகொலை!

தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் படகில் தூங்கிக் கொண்டிருந்த சங்கு குளி மீனவர் ராஜா என்பவரை மர்ம நபர்கள் கொடூரமாக வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பி ஓட்டம் வடபாகம் காவல்துறையினர் விசாரணை;

Update: 2025-04-21 02:52 GMT
தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் படகில் தூங்கிக் கொண்டிருந்த சங்கு குளி மீனவர் ராஜா என்பவரை மர்ம நபர்கள் கொடூரமாக வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பி ஓட்டம் வடபாகம் காவல்துறையினர் விசாரணை தூத்துக்குடி திரேஸ்புரம் மாதவன் நாயர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜா என்ற ராஜா சங்கு குழி மீனவர் இவர் மீது வடபாகம் காவல் நிலையத்தில் அடிதடி வழக்குகள் உள்ளன இந்நிலையில் இன்று அதிகாலை திரேஸ்புரம் கடற்கரையில் சங்கு எடுக்கச் செல்லும் ஒரு நாட்டுப்படகில் உடலில் பல்வேறு இடங்களில் வெட்டு காயங்களுடன் ராஜா ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார் இதைத் தொடர்ந்து சக மீனவர்கள் வடபாகம் காவல்துறைக்கு புகார் அளித்ததை தொடர்ந்து வடபாகம் காவல்துறையினர் கொலை செய்யப்பட்டு கிடந்த ராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் ராஜா மது போதையில் ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டாரா அல்லது முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதுடன் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய மர்ம கும்பலை தேடி வருகின்றனர் தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் இரண்டு நாட்களில் இரண்டு கொலைகள் நடைபெற்ற சம்பவம் மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

Similar News