மார்க்கெட்டுக்கு மீன் வரத்து குறைவாக இருந்தால் விலை எகிறியது
மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால் ஈரோடு மார்க்கெட்டிற்கு மீன்கள் வரத்து குறைந்து விலை எகிறிது;
தமிழகத்தில் தற்போது மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால் பல்வேறு இடங்களில் மீன்கள் வரத்து குறைந்து மீன்கள் விலையும் அதிரடியாக உயர்ந்து உள்ளது. ஈரோடு ஸ்டோனி பிரிட்ஜ் மீன் மார்க்கெட்டில் 20-க்கும் மேற்பட்ட மீன் கடைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு காரைக்கால், ராமேஸ்வரம், தூத்துக்குடி, நாகப்பட்டினம், கேரளா போன்ற பகுதிகளிலிருந்து கடல் மீன்கள் அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும். சாதாரண நாட்களை விட வார இறுதி நாட்களில் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். தற்போது மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால் இன்று மார்க்கெட்டுக்கு மீன்கள் வரத்து குறைந்துள்ளது. இன்று கேரளாவிலிருந்து 15 டன் மீன்கள் மட்டுமே விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்தது. வரத்து குறைவு காரணமாக பெரிய மீன்கள் விலை ரூ.50 இருந்து 100 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் சின்ன மீன்களின் விலை 25 இருந்து 50 வரை உயர்ந்துள்ளது.இன்று மார்க்கெட்டில் விற்கப்பட்ட மீன்களின் விலை கிலோவில் வருமாறு:- சால்மோன் - 900, கொடுவா - 900, வெள்ளைவாவல் - 1,200, கருப்பு வாவல் - 900, வஞ்சரம் - 1,100, மயில் மீன் - 800, கிளி மீன் - 700, முரல் - 450, சங்கரா - 400, விளாமீன் - 550, தேங்காய்ப்பாறை - 550, இறால் - 800, சின்ன இறால் - 500, ப்ளூ நண்டு - 700, சின்ன ப்ளூ நண்டு - 400, அயிலை - 300, மத்தி - 250, டுயானா - 700, திருக்கை - 350, வசந்தி - 450.