டோல்கேட்டை சேதப்படுத்தி ஊழியர்கள் மீது தாக்குதல்!
டோல்கேட்டை சேதப்படுத்தி ஊழியர்கள் மீது தாக்குதல் : தூத்துக்குடியில் பரபரப்பு ஏற்பட்டது;
தூத்துக்குடியில் இருந்து இசக்கிராஜா என்பவருடன் 10 கார்களில் வந்தவர்களுக்கு வாகைகுளம் டோல்கேட்டில் உள்ள பேரிகார்டை திறந்து விட தாமதம் ஆனதால் காரில் இருந்து இறங்கி வந்த சிலர் பேரிகாடை தூக்கி வீசி, டோல்கேட் கண்ணாடியை சேதப்படுத்தியுள்ளனர். மேலும், அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் பாபு என்ற பரமசிவம் மற்றும் ஆகாஷ் ஆகியோரை நாற்காலியால் தாக்கியுள்ளனர். இதில் பாபுவுக்கு தலையில் ரத்தகாயம் ஏற்பட்டுள்ளது. அவர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து புதுக்கோட்டை போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.