திருப்பத்தூரில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

திருப்பத்தூரில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு நகர போலீசார் விசாரணை;

Update: 2025-04-26 06:57 GMT
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து தையல் மிஷின் மற்றும் கேஸ் சிலிண்டரை திருடி சென்ற மர்ம நபரை நகர போலீசார் தேடி வருகின்றனர் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பாலம்மாள் காலனி பகுதியில் வசிப்பவர் செல்வி(55). இவர் கர்நாடகா மாநிலம் கே ஜி எஃப் அடுத்த பண்டார் லைன் பகுதியில் வசிக்கும் உறவினர் வீட்டிற்கு சென்றபோது இரு சக்கர வாகனத்தில் மோதி விபத்து ஏற்பட்டு கால் முறிந்து சுமார் ஒரு மாத காலமாக அங்கேயே தங்கி சிகிச்சை பெற்று வரும் நிலையில்... சில வாரங்களாக செல்வியின் வீடு பூட்டி இருந்ததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் ஜன்னல் மற்றும் கதவில் இருந்த பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து திருட முயற்சித்த போது வீட்டில் இருந்த பீரோவில் எதுவும் கிடைக்காததால் பக்கத்தில் இருந்த அரிசி நிறைந்த பாத்திரத்தை பார்த்து அரிசிக்குள் ஏதாவது மறைத்து வைத்திருப்பார்களா என நினைத்து அதை கீழே கொட்டி தேடியும் ஏமாற்றம் அடைந்து வந்தது வந்து விட்டோம் என கருதி வீட்டிற்குள் இருந்த இரண்டு கேஸ் சிலிண்டர்கள் தையல் மிஷின் பூட்டி வைத்திருந்த மிதிவண்டிகள் பித்தளை சாமான்களை திருடி சென்றுள்ளனர். கே ஜே பி ல் இருந்து இந்த மாதம் வாங்க வேண்டிய நியாய விலை கடை பொருட்களை வாங்குவதற்கு வீட்டிற்கு வந்த செல்வியின் கணவர் கர்ணன் வீட்டை வந்து பார்க்கும்பொழுது பூட்டை உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து திருப்பத்தூர் நகர காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்ததின் அடிப்படையில் நகர காவல் உதவி ஆய்வாளர் ஜெகஜீவன் மற்றும் காவலர் வீட்டின் உரிமையாளரிடம் தகவல் சேகரித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு அருகாமையில் இருந்த வீட்டில் திருட்டு சம்பவம் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.

Similar News