மனைவி மீது தாக்குதல் நடத்திய கணவர் கைது!
மனைவி மீது தாக்குதல் நடத்திய கணவரை போலீசார் கைது செய்தனர் .;
வேலூர் மாவட்டம் காகிதப்பட்டறை பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (37). கூலித் தொழிலாளியான இவரது மனைவி ஜெயபாரதி (35). நாகராஜுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இந்த நிலையில்,ஜெயபாரதி கருக்கும்பத்தூரில் உள்ள தனது தாய் வீட்டில் இருந்தபோது அங்கு மது போதையில் வந்த நாகராஜ், ஜெயபாரதியை சரமாரியாக தாக்கியுள்ளார்.இதுகுறித்த புகாரின் பேரில் விரிஞ்சிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து நாகராஜை கைது செய்தனர்.