மாரியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்!
தண்டு மாரியம்மன் கோயில் திடலில், ஸ்ரீ வீரா ஆஞ்சநேயர் கோயிலில் பால்குட ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது.;
வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் உள்ள தண்டு மாரியம்மன் கோயில் திடலில், ஸ்ரீ வீரா ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இந்தக் கோயிலின் 3ஆம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு விழாவை முன்னிட்டு, இன்று 108 பால்குட ஊர்வலம் கோலாகலமாக நடைபெற்றது. இந்த ஊர்வலத்தை பகவதி சித்தர் மற்றும் கருப்பசாமி சித்தர் ஆகியோர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.