பைக் திருட முயன்ற இருவர் கைது!

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தில் பைக் திருட முயன்ற இரண்டு பேரை பொதுமக்கள் மடக்கி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.;

Update: 2025-06-17 07:59 GMT
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் மகாதேவமலை கோயிலுக்கு வெளியூரை சேர்ந்த 2 பக்தர்கள் பைக்கில் வந்திருந்தனர். அப்போது பைக்கை விட்டுவிட்டு மலைக்கு சென்றனர். அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள் பைக்குகளை திருட முயற்சி செய்தனர். இதைக்கண்ட அப்பகுதி மக்கள், இருவரையும் மடக்கிப் பிடித்து கே.வி. குப்பம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனையடுத்து குடியாத்தம் பகுதியை சேர்ந்த சரவணன் (26), கதிர்வேல் (27) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Similar News