ஜாமீனில் வெளியே வந்தவர் தற்கொலை!
ஜாமீனில் வெளியே வந்தவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
வேலூர் தொரப்பாடியை சேர்ந்த ரூபன் தேவகுமார் (42). இவரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிதி நிறுவன மோசடி வழக்கில் கோவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து ஜாமீனில் வெளியே வந்த அவர், டோல்கேட் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பாகாயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.