சோளிங்கர் குமரமுருகன் கோவிலில் கிருத்திகை சிறப்பு பூஜை
குமரமுருகன் கோவிலில் கிருத்திகை சிறப்பு பூஜை;
சோளிங்கரை அடுத்த கரிக்கல் கிராமத்தில் மலை மீது அமைந்துள்ள குமரமுருகன் கோவிலில் கிருத்திகையை முன்னிட்டு மூலவர் குமரமுருகன் மற்றும் உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தேவசேனா சாமிக்கு பல்வேறு வகையான நறுமண பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம், பூஜை செய்து, பட்டு வஸ்த்திரம், தங்க ஆபரணங்கள், மலர்மாலை, பல்வேறு வகையான வண்ண மலர்கள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மங்கள வாத்தியங்கள் முழங்க தீபாராதனை நடைபெற்றது. இந்த சிறப்பு பூஜையில் கரிக்கல் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது. மாலையில் கோவில் வளாகத்தில் மங்கள வாத்தி யங்கள் முழங்க உற்சவர் சுவாமி மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.