சோளிங்கரில் மதுபாட்டில்களை வாங்கி சென்ற வாலிபர் கைது

மதுபாட்டில்களை வாங்கி சென்ற வாலிபர் கைது;

Update: 2025-06-23 04:01 GMT
சோளிங்கர் அடுத்த கொண்டப்பாளையம் சப்- இன்ஸ்பெக்டர் கோபி மற்றும் போலீசார் கொண்டப்பாளையம் மற்றும் சுற்றுப் புற பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கொடைக்கல் அருகே மோட்டார்சைக்கிளில் வந்த நபரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். விசாரணையில் அவர் கொடைக்கல் காலனியை சேர்ந்த ராம்ராஜ் (வயது 35) என்பதும், கொடைக்கல் டாஸ்மாக் கடையில் இருந்து 20 பிராந்தி பாட்டில்களை மொத்தமாக வாங்கி வந்து கொடைக்கல் காலனியில் உள்ள மறைவிடத்தில் வைத்து அதிக விலைக்கு விற்பதற்காக கொண்டு சென்றதும் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அவரிடமிருந்த 20 பிராந்தி பாட்டில் மற்றும் மோட் டார்சைக்கிளை பறிமுதல் செய்து, ராம்ராஜை கைது செய்தனர்.

Similar News