விஷம் குடித்து பெண் தற்கொலை
அந்தியூர் அருகே பூச்சி மருந்து குடித்து பெண் தற்கொலை;
ஈரோடு மாவட்டம், அந்தியூர், சமத்துவபுரத்தை சேர்ந்தவர் முத்துலட்சுமி (52). இவரது மகன் மோகன் (36). சலூன் கடை வைத்துள்ளார். இவருக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சேலம் மாவட்டம், செட்டிபட்டியை சேர்ந்த பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரது மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனால் முத்துலட்சுமி அடிக்கடி மகனுடன் சண்டை போட்டு வந்தாராம்.இந்த நிலையில் கடந்த 23-ம் தேதி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் முத்துலட்சுமி பூச்சி மருந்தை குடித்து விட்டார்.அதை கண்ட அக்கம் பக்கத்தினர் மோகனுக்கு தகவல் தெரிவித்து விட்டு, முத்துலட்சுமியை அந்தியூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மோகன், உயர் சிகிச்சைக்காக அவரது தாயார் முத்துலட்சுமியை பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.அங்கிருந்து மீண்டும் சேலம் அரசு மருத்துவமனையில் முத்துலட்சுமியை சேர்த்து சிகிச்சை அளித்து வந்தனர்.இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை முத்துலட்சுமி உயிரிழந்தார். இது குறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.