வாலிபர் தற்கொலை

பவானி அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலைவயிற்று வலியால் விபரீத முடிவு;

Update: 2025-06-30 02:47 GMT
ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்துள்ள ஒலகடம் குணகம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பூவரசன் (28 ) .இவரது மனைவி மஞ்சுளா ( 26).இருவரும் விவசாய வேலைகள் செய்து வந்தனர். பூவரசனுக்கு கடந்த ஒரு மாத காலமாக வயிற்று வலி இருந்து வந்துள்ளது இந்த நிலையில் நேற்று காலை பூவரசன் தனது வீட்டின் அருகில் உள்ள விவசாய நிலத்தில் வாயில் நுரை தள்ளிய நிலையில் கிடந்துள்ளார் உடனடியாக அவரை மீட்டு பவானியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே பூவரசன் இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News