ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே உள்ள பசுவபட்டி பிரிவு, சக்கிலியன் காட்டு தோட்டத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் (40). இவர் தனது வீட்டின் அருகில் கோழிகள் வளர்த்து வந்தார்.இந்த நிலையில் நேற்று அவர் வளர்ந்து வந்த கோழிகளை எண்ணிப் பார்த்தபோது அதில் 6 கோழிகள் மாயமாகி இருப்பது தெரிய வந்தது. அந்த கோழிகளை மர்ம நபர் யாரோ திருடி சென்றதும் தெரிய வந்தது.திருட்டு போன கோழிகளின் மதிப்பு ரூ. 10,000 ஆகும்இதுகுறித்து கார்த்திகேயன் அளித்த புகாரின் பேரில் சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து கோழிகளை தேடிச் சென்ற நபரை தேடி வருகின்றனர்.