மேட்டூர் அணை நீர்மட்டம் அதிகரிப்பு கரையோரம் உள்ள பொது மக்களுக்கு எச்சரிக்கை

மேட்டூர் அணை நீர்மட்டம் அதிகரித்து வருவதால் ஈரோடு தாசில்தார் வீடு வீடாகச் சென்று காவேரி கரையோரம் வசித்து வரும்  பொதுமக்களுக்கு அறிவுரை;

Update: 2025-06-30 03:01 GMT
மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 120 அடியாக உயர்ந்துள்ளது நேற்று மாலைக்குள் முழு கொள்ளளவை எட்ட வாய்ப்பு இருப்பதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர் ஆகையால் கடந்த இரண்டு நாட்களாகவே காவேரி கரையோரம் வசித்து வரும் பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையானது தமிழக அரசு அறிவித்துள்ளது இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் காவிரி கரையோர பகுதிகளில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர் இதனைத் தொடர்ந்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி உத்தரவின் பெயரில் காவிரி கரையோரம் வசித்து வரும் பொது மக்களுக்கு வெள்ள அபாயம் குறித்து அறிவுறுத்த வேண்டுமென சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி  உள்ளார் அதனை அடுத்து ஈரோடு வருவாய் வட்டாட்சியர் முத்துகிருஷ்ணன் காவிரி துறையூர் வசித்து வரும் பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று வீடு வீடாக வெள்ள அபாயம் குறித்து அறிவுறுத்தினார் பின்பு அப்பகுதி முழுவதும் ஈரோடு மாநகராட்சி வாகனங்களில் ஒலிபெருக்கி மூலம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் ஆற்றில் யாரும் துணி துவைக்கவோ குளிக்கவோ கூடாது என்று அறிவு படுத்தப்பட்டு வருகிறது.

Similar News