பைக் மீது கார் மோதி விபத்து: ரியல் எஸ்டேட் தரகர் பரிதாப பலி

கயத்தாறு அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் ரியல் எஸ்டேட் தரகர் பரிதாபமாக இறந்தார்.;

Update: 2025-06-30 15:35 GMT
கயத்தாறு அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் ரியல் எஸ்டேட் தரகர் பரிதாபமாக இறந்தார். தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே உள்ள தெற்கு இலந்தைகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் அருணாசலம் மகன் ஆதிமூலம் (70), இவர் ரியல் எஸ்டேட் புரோக்கர் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று இரவு கயத்தாறில் இருந்து தெற்கு இலந்தைகுளம் கிராமத்திற்கு தனது மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, வெள்ளாலங் கோட்டையில் இருந்து கயத்தாறு நோக்கி வந்த ஒரு கார் பைக் மீது மோதியது. இவ்விபத்தில் படுகாயம் அடைந்த ஆதிமூலம் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறத்து கயத்தாறு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுதா தேவி சம்பவ இடத்திற்கு சென்று இவரது உடலை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து காரை ஓட்டி வந்த கோவில்பட்டியை சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் பெரியசாமி (40) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்

Similar News