ஈரோடு எஸ் பி அலுவலகத்தில் பரபரப்பு
ஈரோடு எஸ்.பி.அலுவலகத்திற்கு மண்ணெண்ணெய் கேனுடன் வந்த நபரால் பரபரப்பு;
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுந்தரராஜ் (32). லேத் பட்டறை தொழிலாளி. இவருக்கும் ஈரோடு வில்லரசம்பட்டி பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கணவன் மனைவியும் நாமக்கலில் வசித்து வந்தனர். இந்நிலையில் சுந்தர்ராஜிக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மது அருந்து வீட்டுக்கு வந்ததால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. பொருத்து பார்த்த சுந்தர்ராஜ் மனைவி கணவரிடம் கோபித்துக் கொண்டு வில்லரசம்பட்டியில் உள்ள தாய் வீட்டுக்கு வந்து விட்டார். இந்நிலையில் அவர் செயலி மூலம் கணவர் குறித்து ஈரோடு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் சுந்தர்ராஜை தொடர்பு கொண்டு இன்று விசாரணைக்கு வருமாறு அழைத்திருந்தனர்.அதன் அடிப்படையில் சுந்தர்ராஜ் இன்று காலை எஸ்.பி அலுவலகத்திற்கு மண்ணெண்ணெய் கேனுடன் வந்தார். அவரது மனைவியும், அவரது தாய யாரும் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் எழுத நின்று கொண்டிருந்தனர். அப்போது சுந்தர்ராஜ் மண்ணெண்ணெய் கேனை மனைவிடம் கொடுத்து என்னை தீட்டு கொடுத்துவிடு அல்லது என்னுடன் வாழவா என்று கூறியுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த எஸ் பி அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து சென்று அவரிடம் இருந்த மண்ணெண்ணெயை பறித்துக் கொண்டனர். பின்னர் சுந்தர் ராஜை விசாரணைக்காக ஈரோடு டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதனால் எஸ்.பி. அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியல் .