சாலையோரம் தூய்மை பணியில் ஈடுபட்ட தன்னார்வலர்கள்

சத்தியமங்கலம் -காரப்பள்ளம் சோதனை சாவடி வரை வனப்பகுதியில் சாலையோரம் தூய்மை பணியில் ஈடுபட்ட தன்னார்வலர்கள்;

Update: 2025-07-01 07:24 GMT
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனச்சரகத்துக்கு உட்பட்ட பண்ணாரி முதல் திம்பம் சாலை வழியாக காரப்பள்ளம் சோதனை சாவடி வரை நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. தமிழகம் - கர்நாடகாவை இணைக்கும் மிக முக்கிய போக்குவரத்து பகுதியாக இவை உள்ளதால் எப்போதும் பரபரப்பாக காட்சி அளிக்கும். அடர்ந்த வனப்பகுதியில் இந்த சாலைகள் உள்ளதால் சிறந்த சுற்றுலா தளமாகவும் திகழ்ந்து வருகிறது. இதனால் அந்த பகுதியாக வரும் வாகன ஓட்டிகள், சுற்றுலா பயணிகள் சாலையோரம் தாங்கள் கொண்டு வரும் பிளாஸ்டிக் பாட்டில், பை, கண்ணாடி பாட்டில் போன்றவற்றை வீசி செல்கின்றனர். இரை தேடி வரும் விலங்குகள் இவற்றை தின்பதால் உயிரிழப்பு அபாயம் நேரிடுகிறது. மேலும் சுற்றுச்சூழலும் பாதிப்பு ஏற்படுகிறது. இதை அடுத்து 200-க்கும் மேற்பட்ட பண்ணார்வலர்கள் சாலையோரம் வீசப்பட்டிருந்த பிளாஸ்டிக்க கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பண்ணாரி திம்பம் மலைப்பகுதி ஆசனூர் வழியாக காரப்பள்ளம் வரை பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றினர். இவர்களுடன் வனத்துறையினரும் இணைந்து தூய்மை பணியில் ஈடுபட்டனர். இந்தப் பணியை சமூக ஆர்வலர்கள், இயற்கை நல ஆர்வலர்கள் பாராட்டி உள்ளனர்.

Similar News