சூதாடியவர்கள் கைது

பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது;

Update: 2025-07-01 07:35 GMT
ஈரோடு மாவட்டம், வெள்ளித்திருப்பூர் அருகே உள்ள சித்த கவுண்டனூர் அருகில் உள்ள கரட்டு பகுதியில் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடுவதாக வெள்ளித்திருப்பூர் போலீசாருக்கு நதகவல் கிடைத்தது.அதன் பேரில் போலீசார் குறிப்பிட்ட இடத்துக்குச் சென்று அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த கும்பலை மடக்கிப்பிடித்தனர். விசாரணையில் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த சக்திவேல் (36), முருகன் (36), சீரங்கன் (50), குபேரன் (47), தாண்டவன் (47), குமார் (37), சக்தி (43) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.மேலும் அவர்களிடமிருந்து சீட்டு கட்டுகள் மற்றும் பணம் ரூ 1,700 ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

Similar News