முதியவர் தற்கொலை
அந்தியூர் அருகே பரிதாபம் முதியவர் தீக்குளித்து தற்கொலை போலீசார் விசாரணை;
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத்துள்ள தவுட்டுப்பாளையம் அவினாசியப்பன் வீதியைச் சேர்ந்தவர் காளியப்பன் (59). இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. அதன் காரணமாக வயிற்றுவலி பாதிப்பு ஏற்பட்டு வேலைக்கும் செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் காளியப்பன் வீட்டில் இருந்த மண்ணெண்ணெய்யை தன் மீது ஊற்றி தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டுஅக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் உயர் சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.அங்கு சிகிச்சை பெற்று வந்த காளியப்பன் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது குறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.