அரசு அதிகாரிகள் ஒத்துழைப்புடன் மண் கொள்ளை

குத்தாலம் வட்டாட்சியர் ஆதரவோடு   அரசு அனுமதியின்றி மண் குவாரி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை;

Update: 2025-07-02 05:06 GMT
மயிலாடுதுறை சேத்திரபாலபுரம் பகுதியில் காவிரி ஆற்றின் கரைப்பகுதியில் 100 மீ தூரத்தில் உள்ள நிலத்தில் மண் குவாரி 3 தினங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டு 300 லாரிகளுக்குமேல் இரவு பகலாக மண் அள்ளப்பட்டது, இதுகுறித்து அப்பகுதி மக்கள் குத்தலாம் வட்டாட்சியரிடம் புகார் தெரிவித்தபோது அவர் கண்டுகொள்ளவில்லை, இதுகுறித்து திங்கட்கிழமை மயிலாடுதுறை மாவட்டஆட்சியர் புகார் அளித்தனர், அரசு அனுமதியின்றி மண் குவாரி செயல்பட்டு வருகிறது, அதைஉடனடியாக நிறுத்தி மண் வாரப்பட்ட பொக்லின் எந்திரம் மற்றும் லாரிகளை உடனடியாக கைப்பற்றவேண்டும் இல்லை என்றால் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர்.  இதுகுறித்து விமல் என்பவர் தெரிவிக்கையில்,    எந்தவித அரசு அனுமதியின்றி குத்தாலம் வட்டாட்சியர் ஆதரவுடன் மண் கடத்தப்பட்ட நிலையில் மண் கடத்தியவர்கள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனங்களை பறிமுதல் செய்யாதது அப்பகுதி மக்களை ஆச்சரியத்தில ஆழ்த்தியுள்ளது.  மொபட்டில் சாக்குமூட்டையில் மணல் கடத்தினார்கள் என்று அவர்களைக் கைதுசெய்து திருட்டு வழக்கு மற்றும் கனிமவள திருட்டு வழக்கு என்று போட்டு சிறையில் அடைத்துவரும்நிலையில் இந்த மணல் குற்றவாளிகள் சுதந்திரமாகச் சுற்றித்திரியவிடுவது என்ன நியாயம் என கேட்டார்.

Similar News