பரிமளரெங்கநாதர் ஆலயத்தில் நான்கு ஜோடிகளுக்கு திருமணம்

மயிலாடுதுறை அருகே இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோயிலில் 4 ஜோடிகளுக்கு திருமணம்;  தலா ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள சீர்வரிசைகள் வழங்கப்பட்டன;

Update: 2025-07-02 12:10 GMT
மயிலாடுதுறை திருஇந்தளூரில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள புகழ்பெற்ற  பரிமள ரெங்கநாதர்   ஆலயத்தில்   4 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. இதனைமுன்னிட்டு அந்த 4 ஜோடிகளுக்கும் தலா ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள திருமாங்கல்யம், ஆடைகள், முகூர்த்த மாலைகள் மற்றும் கட்டில் பீரோ உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை சீதனமாக  இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள்  வழங்கினர்.  , மயிலாடுதுறை நர்மன்ற தலைவர் குண்டாமணி.செல்வராஜ், இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் புதுமணத்தம்பதியினரின் உறவினர்கள் மக்கள் பிரதிநிதிகள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்

Similar News