ராசிபுரம் அருகே பெண் எஸ்ஐ காவல் நிலையத்தில் உயிரிழப்பு. மாரடைப்பால் உயிரிழந்தாரா ? அல்லது வேறு ஏதாவது காரணங்களா ? என்பது குறித்து போலீசார் விசாரணை...

ராசிபுரம் அருகே பெண் எஸ்ஐ காவல் நிலையத்தில் உயிரிழப்பு. மாரடைப்பால் உயிரிழந்தாரா ? அல்லது வேறு ஏதாவது காரணங்களா ? என்பது குறித்து போலீசார் விசாரணை...;

Update: 2025-07-02 14:14 GMT
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்து பேளுக்குறிச்சி காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக காமாட்சி(48) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் காமாட்சிக்கு நேற்றைய இரவு ரோந்து பணி என்பதால் நேற்று இரவு பணிக்கு சென்று விட்டு மீண்டும் இரவு சுமார் 2 மணி அளவில் காவல் நிலையத்திற்கு வந்துள்ளார். காவல் நிலையத்திற்கு வந்த காமாட்சி காவல் நிலைய ஓய்வறைக்கு சென்றதாகவும், காலை பணிக்கு வந்த காவலர்கள் காமாட்சியின் ஓய்வறையின் கதவு உள் பக்கமாக தாளிட்டிருந்ததால், நீண்ட நேரமாக கதவு திறக்கப்படாததால் சக காவலர்கள் உதவி உடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது காமாட்சி உயிரிழந்த நிலையில் இருந்துள்ளார். பின்னர் அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கவே சம்பவ இடத்திற்கு வந்த உறவினர்கள் காவலரின் உடலை கண்டு கண்ணீர் விட்டு அழுதனர்.பின்னர் அவரது உடல் கைப்பற்றபட்டு பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த நிலையில் பணியில் இருந்த எஸ்.ஐ திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணங்களா என்பது குறித்து ராசிபுரம் டிஎஸ்பி விஜயகுமார் தலைமையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்...

Similar News