ராசிபுரம் ஊர் பெயர் முன்னால் ,"இ" போட வேண்டும் என தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் நகாட்சி தலைவரிடம் மனு அளித்தனர்...

ராசிபுரம் ஊர் பெயர் முன்னால் ,"இ" போட வேண்டும் என தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் நகாட்சி தலைவரிடம் மனு அளித்தனர்...;

Update: 2025-07-04 13:21 GMT
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பட்டணம் சாலையில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி மாணவ, மாணவிகள் ராசிபுரம் நகர மன்ற தலைவர் முனைவர் திருமதி ஆர்.கவிதா சங்கர் அவர்களிடம் மனு ஒன்றை அளித்தனர். அதில், தமிழகத்தில் தான் முத்தமிழ் வளர்க்கப்பட்டது. ராசிபுரம் நகர் கல்வி நிறுவனங்களுக்கு பெயர் போனது. இந்நிலையில் தமிழில் ரா, ர என்ற எழுத்துகளுக்கு முன்னால், "இ" என்ற உயிர் எழுத்தை சேர்த்து எழுத வேண்டும் என தமிழ் பாடத்தில் படித்துள்ளோம். ஆனால், ராசிபுரம் நகராட்சியில் ஊர் பெயர் பலகையில் இருந்து, குப்பை வண்டிகள் வரை பல இடங்களில் "இ" என்ற உயிர் எழுத்தை சேர்க்காமல் ராசிபுரம் என்றே உள்ளது. இந்த பிழையை திருத்தி இராசிபுரம் என்று எழுத வேண்டும் என இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம் என இவ்வாறு மாணவ, மாணவிகளின் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்..

Similar News