ஓரணியில் தமிழ்நாடு எனும் பெயரில் ஆன்லைன் மூலம் உறுப்பினர் சேர்க்கை அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார்..
ஓரணியில் தமிழ்நாடு எனும் பெயரில் ஆன்லைன் மூலம் உறுப்பினர் சேர்க்கை அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார்..;
ஓரணியில் தமிழ்நாடு எனும் பெயரில் ஆன்லைன் மூலம் உறுப்பினர் சேர்க்கையை தமிழக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்த நிலையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டமன்ற அலுவலகத்தில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா. மதிவேந்தன், தலைமையில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. இந்த ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கையில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் தன் மொபைல் மூலம் ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கையில் சேர்ந்தார். அதனைத் தொடர்ந்து ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் செய்தியாளர் சந்திப்பில், திமுக தலைவர் ஓரணியில் தமிழ்நாடு என்ற முன்னெடுப்பை துவக்கி வைத்துள்ளார். ராசிபுரம் சட்டமன்ற தொகுதியில், ஓரணியில் தமிழ்நாடு என்ற உறுப்பினர் சேர்க்கை முகாமை துவக்கி வைத்து, என்னுடைய உறுப்பினர் அங்கீகாரத்தை புதுப்பித்துள்ளேன். ராசிபுரம் தொகுதியில் உள்ள ஒவ்வொரு பகுதியிலும் வீடு வீடாக சென்று திமுகவைச் சேர்ந்த தகவல் தொழில் அணி மற்றும் இளைஞர் அணி, சார்பு அணியைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொரு பொதுமக்களை சந்தித்து திமுகவில் இணைய வேண்டிய அவசியம் என்ன மற்றும் நம்முடைய தமிழ்நாட்டுக்கு இழைக்கக்கூடிய அநீதிகளை எடுத்துரைத்து, நாம் ஏன் அனைவரும் ஓரணியில் ஒன்றாக இணைய வேண்டும் என்ற கருத்தை முன் வைக்க உள்ளோம். ஓரணியில் தமிழ்நாடு என்பது, திராவிடக் முன்னேற்றக் கழகத்திற்கு உறுப்பினர்களை சேர்ப்பது மட்டுமல்ல. பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிற தமிழர்களுடைய உரிமைகளை பாதுகாக்க, மண், மொழி, மானம், பண்பாடு, பாரம்பர்த்தை பாதுகாக்க நம்முடைய தமிழக முதலமைச்சர் முன்னெடுத்துள்ள இந்த முக்கியமான முகாமை நாம் எந்த அளவுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்ற கருத்துக்களை பொதுமக்களிடம் எடுத்துரைக்க உள்ளோம். ராசிபுரம் தொகுதிக்குட்பட்ட அனைத்து பொதுமக்களும் இந்த முகாமில் இணைவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த காலகட்டத்தில் இந்த முன்னெடுப்பு முக்கியமானது. வரும் கால சந்ததியினருக்கான முன்னெடுப்பு என்பதால் மிகப்பெரிய ஆதரவு பெறும் என்பதில் எங்களுக்கு சந்தேகம் இல்லை. எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணம் குறித்து கேட்டபோது, ஒவ்வொரு கட்சியிலும் சுற்றுப்பயணத்தை அந்தந்த கட்சியினர் மேற்கொள்வார்கள். நாங்கள் மேற்கொள்வது கட்சி ரீதியானது கிடையாது. தற்போதைய அரசியல் சூழ்நிலையில் வெற்றி தோல்விகள் மட்டும் முக்கியம் கிடையாது. நம்முடைய தமிழர்களுடைய உரிமையை பாதுகாக்க வேண்டும், அவர்களுடைய தமிழ் மொழியை பாதுகாக்க வேண்டும், நம்முடைய பண்பாடு மானத்தை பாதுகாக்க வேண்டும் நம்முடைய சுயமரியாதை பாதுகாக்க வேண்டும் என்பதே முக்கியம். அதற்காகத்தான் நம்முடைய முதலமைச்சராக அவர்கள் இந்த ஓரணியில் தமிழ்நாடு முன்னேடுப்பை துவக்கியுள்ளார். அந்த கோணத்தில் தான் இதனை துவங்கி இருக்கிறோம். ஒவ்வொரு கட்சியும் அரசியல் ரீதியான முகாம்களை பிரச்சாரத்தை துவங்கியுள்ளனர். இது வேறு, அது வேறு. தமிழர்கள் உரிமைகளை மண் மொழி மானம் காப்பதற்காக எடுத்துக்கூடிய முன்னெடுப்பு இது. பாதிக்கப்பட்ட குடும்பத்திடம் தமிழக முதல்வர் பேசிய உள்ளார். அனைத்து உதவிகளையும் செய்து வருகிறார். இதில் தொடர்பானவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறார். என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமா அதனை எடுத்திருக்கிறார், நடைபெற்ற சம்பவம் மிகவும் வருத்தமாக உள்ளதாக என கூறினார்...