வார விடுமுறையையொட்டி ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்;

Update: 2025-07-07 03:31 GMT
இயற்கை எழில் கொஞ்சும் ஏற்காட்டிற்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி போன்ற வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இந்நிலையில் வாரவிடுமுறையான நேற்று ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்தனர். அவர்கள் ஏற்காட்டில் உள்ள சேர்வராயன் கோவில், பக்கோடா பாயிண்ட், லேடி சீட், ஜென்ஸ் சீட், ரோஸ் கார்டன், அண்ணா பூங்கா, படகு இல்லம் போன்ற பல்வேறு இடங்களை சுற்றி பார்த்து மகிழ்ந்தனர். படகு இல்லத்தில் நீண்ட நேரம் காத்திருந்து படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

Similar News