வாணியம்பாடி அருகே வீட்டில் உள்ள மின்சார பெட்டியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து

வாணியம்பாடி அருகே வீட்டில் உள்ள மின்சார பெட்டியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து;

Update: 2025-07-11 07:20 GMT
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே வீட்டில் உள்ள மின்சார பெட்டியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அனைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே உள்ள முனிசாமி தெருவை சேர்ந்தவர் ராஜ்கமல் இவர் பேருந்து நிலையத்தில் பாணிபூரி கடை வைத்து நடத்தி வருகிறார்.இந்த நிலையில் இவரது வீட்டின் கீழ் தளத்தில் தண்ணிர் மோட்டார் போட பொருத்தப்பட்டுள்ள சுவிட்ச் பாக்ஸில் மின் கசிவு ஏற்பட்டு திடீரென தீ பிடித்து எரிந்தது.அந்த தீ மளமளவென பரவி மின் வாரியம் சார்பில் மின்சாரம் கணக்கீடு செய்யும் மீட்டர் பாக்ஸில் தீ பிடித்து எரிந்தது. அந்த வீட்டில் உள்ளவர்கள் இதை பார்த்து உடனடியாக அலறியடித்துக் கொண்டு தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர் தகவல் அறிந்து அங்கு வந்த் வாணியம்பாடி தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்தின் போது அனைவரும் முதல் தளத்தில் இருந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது

Similar News