மஞ்சள் நிறத்தில் ஏஞ்சல் நடனம் ஆடுவது போன்று காட்சி தரும் ஆர்க்கிட் மலர் .........

சுற்றுலாப் பயணிகள் கண்டு வியப்பு...................;

Update: 2025-07-11 15:45 GMT
மஞ்சள் நிறத்தில் ஏஞ்சல் நடனம் ஆடுவது போன்று காட்சி தரும் ஆர்க்கிட் மலர் ......... சுற்றுலாப் பயணிகள் கண்டு வியப்பு................... மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் உலக சுற்றுலா வரைபடத்தில் இடம் பெற்றுள்ள மாவட்டமாகும். இம்மாவட்டத்திற்கு அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் சமவெளி பிரதேசங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை புரிவது வழக்கம். குறிப்பாக உதகையில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், ரோஜா பூங்கா, தேயிலை பூங்கா கர்நாடகா கார்டன்,உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்களை காண வருகை தருகின்றனர். இந்நிலையில் மலைப்பகுதிக்குள் உள்ள இரண்டாவது பெரிய பூங்காவாக கருதப்படும் கர்நாடகா பூங்காவில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் மலர் படுக்கைகளுடன் புல்வெளிகள் வண்ண மலர்கள் மற்றும் தொங்கு பாலம் போன்றவை சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது இந்த பூங்காவில் உள்ள நர்சரி குடிலில் மஞ்சள் நிறத்தில் ஏஞ்சல் நடனம் ஆடுவதை போன்று காட்சி தரும் மஞ்சள் ஆர்க்கிட் மலர்கள் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து வருகிறது இந்த மலர்களை சுற்றுலாப் பயணிகள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்து செல்கின்றனர் மேலும் இந்த மலர் அருகில் நின்று புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.

Similar News