சில நிமிடம் தாமதமாக வந்தவர்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்காததால் காவல்துறையிடம் வாக்குவாதம்.
சில நிமிடம் தாமதமாக வந்தவர்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்காததால் காவல்துறையிடம் வாக்குவாதம்.;
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தனியார் பள்ளியில் குரூப் 4 தேர்வு எழுத வந்த தேர்வாளர்கள் சில நிமிடம் தாமதமாக வந்தவர்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்காததால் காவல்துறையிடம் வாக்குவாதம். தமிழகம் முழுவதும் இன்று குரூப் 4 தேர்வு நடைபெறுகிறது இந்த நிலையில் VAO இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 3935 பணியிடங்களுக்கு டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு இன்று நடைபெறுகிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் குருப் 4 தேர்வாணைய போட்டித் தேர்வு 64 தேர்வு மையங்களில் 17,184 தேர்வு எழுத உள்ளனர். இந்நிலையில் வாணியம்பாடி இஸ்லாமிய ஆண்கள் கல்லூரியில் நடைபெற்று வரும் தேர்வு மையத்தில் ஏராளமானோர் தேர்வு எழுத வந்திருந்தனர். ஒரு சிலர் சில நிமிடம் தாமதமாக வந்ததால் அவர்களை தேர்வு அறைக்குள் அதிகாரிகள் அனுமதிக்காததால் ஆத்திரமடைந்த தேர்வர்கள் காவல்துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனால் 30-க்கும் மேற்பட்டோர் தேர்வு எழுத முடியாமல் நிலை ஏற்பட்டது அதனைத் தொடர்ந்து காவலர்கள் தேர்வர்களை சமாதானம் படுத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.