நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவனை பாராட்டிய எம்எல்.ஏ.

நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவனை பாராட்டிய எம்எல்.ஏ.;

Update: 2025-07-26 10:13 GMT
கிருஷ்ணகிரி மாவட்ட அரசு மாதிரி பள்ளியில் பயின்ற பண்டசீமனூர் பகுதியைச் சேர்ந்த மாணவன் சதீஷ்குமார் இவர் நீட் தேர்வில் 563 மதிப்பெண்கள் பெற்று நீட் தேர்வு தரவரிசை பட்டியல் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில், மாநில அளவில் 2-ம் இடத்தை பிடித்தார். தேர்வில் வெற்றி பெற்ற மாணவன் சதீஷ்குமாரை பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் நேரில் சந்தித்து ஊக்கத்தொகை வழங்கி பாராட்டி வாழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் இருந்தனர்.

Similar News