சங்கரநாராயணசாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா கொடியேற்றம்

ஆடித்தபசு திருவிழா கொடியேற்றம்;

Update: 2025-07-28 03:00 GMT
தென்காசி மாவட்டம் சங்கரன் கோவிலில் உள்ள சங்கரநாராயண சுவாமி கோயில் தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில் ஆகும். இங்கு சிவ னும் விஷ்ணுவும் ஒன்று என் பதை உணர்த்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் உத்திராடம் நட்சத்திரம் நாளில் தவமிருக்கும் கோமதி அம்மனுக்கு சிவபெருமான் சங்கரநாராயணராக காட்சி கொடுக்கும் ஆடித் தபசு திருவிழா மிக முக்கிய திருவிழா ஆகும். இந்த ஆண்டிற்கான இத் திருவிழா இன்று காலை 4.42மணிக்கு கோமதி அம்மன் சன்னதியில் உள்ள தங்க கொடி மரத்தில் கொடி யேற்றத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினமும் காலை கோமதி அம்மன் பல்வேறு அலங்காரங்களில் வீதி உலா வந்து பக்தர் களுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த விழாவில் 9ம்திருநாளான ஆகஸ்ட் 5ம்தேதி (செவ்வாய்க் கிழமை) காலை 8.45 மணிக்கு மேல் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடித்த பசு 11ம் திருநாளான ஆகஸ்ட் 7ம் தேதி (வியாழக்கிழமை) தவமிருக்கும் கோமதி அம்மனுக்கு சங்கரநாராயணராக காட்சிகொடுக்கும் வைபவம் நடைபெறுகிறது.

Similar News