தென்காசி மாவட்ட அணைகளின் நீர் இருப்பு நிலவரம்
அணைகளின் நீர் இருப்பு நிலவரம்;
தென்காசி மாவட்டம் கடனா அணையில் இன்று (ஜூலை 29) காலை 7 மணி நிலவரப்படி 79 அடி நீர் இருப்பு உள்ளது. இந்த அணைக்கு வினாடிக்கு 214 கன அடி நீர் வருகிறது. 100 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. ராமநதி அணை நீர் இருப்பு 82 அடி நீர்வரத்து 74 அடி, வெளியேற்றம் 74 அடி. கருப்பாநதி நீர் இருப்பு 64 அடி, நீர்வரத்து 53 அடி. குண்டாறு நீர் இருப்பு 36.10 அடி, நீர் வரத்து மற்றும் வெளியேற்றம் 71 கனஅடி. தென்காசி மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்ததால் இந்த பகுதியில் உள்ள அனைத்து அணைகளும் கொள்ளளவு எட்டியதால் அப்பகுதி உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.