கோவை: நள்ளிரவில் டிப் - டாப் உடையுடன் வந்த பைக் திருடும் மர்ம ஆசாமி : சி.சி.டி.வி காட்சி வெளியீடு !
நள்ளிரவில் டிப்-டாப் உடையுடன் வாகன திருடர்கள் – கோவையில் அதிர்ச்சி சம்பவம்.;
கேரளாவை சேர்ந்தவர் சுஜின். இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். இந்நிலையில் இவரது இருசக்கர வாகனத்தை நேற்று வழக்கம் போல் ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள அவரது வீட்டின் முன்பு நிறுத்தி உள்ளர். அப்போது நள்ளிரவில் டிப்-டாப் உடையுடன் வந்த இரண்டு கொள்ளையர்கள் விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தின் லாக்கை உடைத்து திருடி சென்று உள்ளனர். இருசக்கர வாகனத்தை லாபகமாக திருடிச் செல்வது அங்கு பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி காட்சிகளில் பதிவாகி உள்ளது. இந்நிலையில் இளைஞர் சுஜின் வாகனம் திருட்டு குறித்து ஆர்.எஸ் புரம் காவல் நிலையத்தில் சி.சி.டி.வி காட்சிகளுடன் புகார் அளித்து உள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் கொள்ளையர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.