உங்களுடன் ஸ்டாலின் முகாமில் நடந்த சுவாரஸ்ய சம்பவம் !
உங்களுடன் முதல்வர் ஸ்டாலின் முகாமுக்கு வந்தவர்கள் தவறவிட்ட பணத்தை பத்திரமாக மீட்டுக் கொடுத்த தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு.;
கோவை மாவட்டம் சூலூர் அருகே பள்ளபாளையம் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமில் கலந்துகொண்ட ஒருவர், தன்னுடைய 3,000 ரொக்கப் பணத்தைக் கீழே தவறவிட்டார். அப்போது, அங்கு பணியில் இருந்த பள்ளபாளையம் பேரூராட்சியின் தூய்மைப் பணியாளர்களான ஜோதிமணி மற்றும் சுமதி ஆகியோர் அந்தப் பணத்தைக் கண்டெடுத்தனர். உடனடியாக அவர்கள் நேர்மையாக பணத்தை அங்கிருந்த காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து, சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில் குமார் விசாரணை மேற்கொண்டு அங்கிருந்த உதவி மையத்தில் ஒலிபெருக்கி மூலம் அங்கிருந்த பொதுமக்களிடம் தெரிவித்தனர். பின்னர், பணத்தை தொலைத்த நபர் உதவி மையம் அருகே வந்து பேரூராட்சித் தலைவர் செல்வராஜ் முன்னிலையில், பணம் உரியவரிடம் பத்திரமாகத் திருப்பி அளிக்கப்பட்டது. தூய்மைப் பணியாளர்களின் இந்த நேர்மையான செயலுக்குப் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.