சூலூரில் ஆபத்தான பாலம் – அச்சத்தில் கிராம மக்கள்
கோவை மாவட்டம் சூலூர் அருகே பள்ளபாளையம் அண்ணாச்சி தோட்டத்தில் 35 ஆண்டுகள் பழமையான பாலம் சிதிலமடைந்து, இருபுற தடுப்புச் சுவர்கள் இடிந்த நிலையில் உள்ளது.;
கோவை மாவட்டம் சூலூர் அருகே பள்ளபாளையம் அண்ணாச்சி தோட்டத்தில் 35 ஆண்டுகள் பழமையான பாலம் சிதிலமடைந்து, இருபுற தடுப்புச் சுவர்கள் இடிந்த நிலையில் உள்ளது. தினமும் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன்படுத்தும் இந்தப் பாலத்தில், சமீபத்தில் குழந்தை ஒருவர் கீழே விழுந்து காயமடைந்தார். சம்பவத்தைத் தொடர்ந்து எம்எல்ஏ விபி கந்தசாமி ஆய்வு செய்து, மனுக்கள் பெற்றார். மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்; இல்லையெனில் போராட்டம் நடத்துவதாக எச்சரித்துள்ளனர்.