கோவை: ஆர்.வி.எஸ் கல்லூரியில் பட்டமளிப்பு விழா !
கல்லூரியின் பட்டமளிப்பு விழா இந்தியவில் மருத்துவ துறை படித்த மாணவர்களுக்கு வெளிநாடுகளில் வாய்ப்புகள் அதிகம் -மருத்துவத்துறைக்காக இந்திய அரசு பல்வேறு திட்டங்களைக் கொண்டு வருவதாக அருண் பழனிச்சாமி பேச்சு;
சூலூர் ஆர்.வி.எஸ். மருத்துவக் கல்லூரி, மருந்தாக்கியல் கல்லூரி, மற்றும் செவிலியர் கல்லூரியின் பட்டமளிப்பு விழா கோவையில் உள்ள கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கே.எம்.சி.எச் ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனத்தின் அறங்காவலர் அருண் பழனிச்சாமி கலந்துகொண்டார். விழாவில் பட்டம் பெற்ற மாணவர்களுக்கு அருண் பழனிச்சாமி, ஆர்.வி.எஸ். நிர்வாக அறங்காவலர் செந்தில் கணேஷ், மற்றும் தாளாளர் ஸ்ரீதேவி லக்ஷ்மி ஆகியோர் பட்டங்களை வழங்கினர். பின்னர் மாணவர்களிடையே உரையாற்றிய அருண் பழனிச்சாமி, மருத்துவம் படித்த மாணவர்களுக்கு இந்தியாவில் மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் அதிக வேலைவாய்ப்புகள் உள்ளன. ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தனது அயராத உழைப்பாலும், ஆர்வத்தாலும் குடியரசுத் தலைவர் பதவி வரை உயர்ந்தார். அதுபோல ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சியம் இருக்க வேண்டும். ஒரு பெரிய நிறுவனம் இயங்குவதே தினசரி புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும் என்பதற்காகத்தான். இந்திய மருத்துவம் மற்ற நாடுகளைவிட மிகச்சிறந்த நிலையில் உள்ளது. இந்திய அரசும் மருத்துவ மாணவர்களுக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்கி வருகிறது," என்றார். மருத்துவத்துறையி தொடர்ந்து பேசிய நிர்வாக அறங்காவலர் செந்தில் கணேஷ், தற்போது அனைத்து துறைகளிலும் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. மருத்துவத்துறையிலும் அதன் பயன்பாடு இன்றியமையாததாக உள்ளது. எனவே, மாணவர்கள் தாங்கள் கற்ற அறிவுடன் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த விழாவில் கல்லூரி செயலாளர் சாரம்மாள், கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள், மற்றும் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.