இருசக்கர வாகனத்தில் புகுந்த மூன்று அடி நீளம் உள்ள நாகப் பாம்பு - பெரும் போராட்டத்திற்கு பின்பு மீட்பு !
கோவையில் ஆக்டிவாவில் பதுங்கிய நாகம் – பாம்பை மீட்ட வீரர்.;
கோவை வஉசி பூங்கா அருகே உள்ள பார்க் கேட் பகுதியில் கவிதா என்பவர் தனது இருசக்கர வாகனம் ஆக்டிவா நிறுத்தி இருந்தார். இந்த நிலையில் அந்தப் பகுதியில் வந்த மூன்று அடி நீளம் கொண்ட நாகப் பாம்பு அவர் நிறுத்தி வைத்து இருந்த அந்த ஆக்டிவா இருசக்கர வாகனத்தில் ஏறியது. இதனைக் கண்ட அங்கு இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து அச்சமடைந்தனர். இது குறித்து உடனடியாக பாம்பு பிடி வீரர் அமீன் என்பவருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அடுத்து அங்கு வந்த அமீன் அரை மணி நேரமாக போராடி பின்னர் அந்த இரு சக்கர வாகனத்தை கீழே படுக்க வைத்து அதன் பின்னர் கால் வைக்கும் இடத்தில் பதுங்கி இருந்த மூன்று அடி நாகப் பாம்பை லாவகமாக மீட்டார். மேலும் வடகோவை பகுதியில் உள்ள வன அலுவலகத்தில் அந்த நாகப் பாம்பு ஒப்படைத்தார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.